இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைவு...!
இந்தியாவில் இன்று 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 23 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,876 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 87 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 704 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 26 லட்சத்து 34 ஆயிரத்து 080 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 183 கோடியே 82 லட்சத்து 41 ஆயிரத்து 743 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.