சட்டவிரோதமாக மின்னணு கழிவுகள் இறக்குமதி; 29 வழக்குகள் பதிவு - மத்திய அரசு தகவல்

மின்னணு கழிவுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-03-29 18:35 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி டி.என்.பிரதாபன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், 2019 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மின்னணு கழிவுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக 29 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு மற்றும் மராட்டிய மாநிலத்தில் தலா 11 சட்டவிரோத மின்னணுக் கழிவுகள் கண்டறிதல் வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் 2020-2021-ல் ஒன்பது வழக்குகளும், 2021-2022 இல் பிப்ரவரி வரை இரண்டு வழக்குகளும் பதிவாகியுள்ளன. மராட்டிய மாநிலத்தில் 2019-2020 இல் மூன்று வழக்குகளையும், 2020-2021 இல் ஒரு வழக்கையும், 2021-2022 இல் ஏழு வழக்குகளையும் பதிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 2019-2020 இல் ஒரு வழக்கு மற்றும் 2021-2022 இல் ஒரு வழக்கு பதியப்பட்டது. குஜராத்தில் 2019-2020ல் இரண்டும், 2021-2022ல் ஒன்று என மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 2020-2021 இல் இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், நாட்டின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில் இது தொடர்பான வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்