பஞ்சாபில் வீடுதேடி ரேசன் விநியோகம் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவு

பஞ்சாபில் பொதுமக்களுக்கு வீடுதேடி ரேசன் விநியோகம் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாமாநில முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-28 08:01 GMT
அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக முதல்முறையாக பொறுப்பேற்றுள்ள பகவந்த மான் கடந்த இரண்டு வாரங்களில் லஞ்ச ஒழிப்பு உதவி எண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை பகவந்த் மான் வெளியிட்ட செய்தியில்,

"பஞ்சாப் மக்களின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருள்களை வழங்க ஆம் ஆத்மி அரசு முடிவெடுத்துள்ளது. மக்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உரிய நேரத்தில் பொருள்களை அலுவலர்கள் வழங்கவுள்ளனர். இந்த திட்டத்தை மக்கள் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்