கேரளாவில் இன்று 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-03-27 12:55 GMT
Image Courtesy: PTI
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 400 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 593 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64 லட்சத்து 58 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 797 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்