புனித அமர்நாத் யாத்திரை ஜூன் 30 ஆம் தேதி தொடக்கம்
புனித அமர்நாத் யாத்திரை ஜூன் 30 ஆம் தேதி தொடங்குகிறது.
ஜம்மு-காஷ்மீர்,
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி 43 நாட்கள் நடைபெறும் என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் அலுவலகம் இன்று ட்வீட் செய்துள்ளது.
ஜம்மு, காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற அமர்நாத்ஜி கோவில் வாரிய கூட்டத்தில் இந்த தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் யாத்திரையிலும் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக சின்ஹாவின் அலுவலகம் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.