கார் விபத்தில் சிக்கிய துணை முதல்-மந்திரியின் மகன்
உத்தரப்பிரதேசத்தில் துணை முதல்-மந்திரியின் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியாவின் மகன் யோகேஷ் குமார் மவுரியா சென்ற கார் நேற்று விபத்தில் சிக்கியது.
உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டம் ஆலம்பூர் புறவழிச்சாலை அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலம்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது யோகேஷ் மவுரியாவின் கார் டிராக்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. உடனடியாக விபத்து நடந்த பகுதிக்கு கல்பி போலீசார் விரைந்து வந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், "கல்பி அருகே விபத்து நடந்தது. விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை, கார் சிறிது சேதமடைந்தது என்று கூறினார். விபத்து நடந்தபோது காரில் யோகேஷ் இருந்ததை எஸ்பி உறுதிப்படுத்தினார்.