நாடு முழுவதும் 107 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை
107 ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது.;
புதுடெல்லி,
இந்தியாவில் போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், ராணுவ போர் வாகனங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் ஆகியவற்றின் 107 உதிரி பாகங்கள், துணை கருவிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது.
வருகிற டிசம்பர் மாதம் முதல் 2028-ம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை இந்த தடை அமலில் இருக்கும். இந்த பொருட்கள், இந்திய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படும். பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்பை அடையும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோல், 2 ஆயிரத்து 851 தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.