பரம்வீர் சிங் வழக்கு - சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
புதுடெல்லி,
மராட்டிய மாநில முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிடம் இருந்து ரூ.100 கோடி வசூலித்ததாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மராட்டிய போலீசார் தொடுத்துள்ள அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஒரு வாரத்திற்குள் சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. உண்மை வெளிவருவது முக்கியம், ஆனால் பரம்வீர் சிங்கும், முன்னாள் உள்துறை மந்திரியும் ஒருவர் மீது ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டன என்று கோர்ட்டு கூறியது.
மும்பையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பரம்வீர் சிங் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பரம்வீர் சிங் மீது இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 5 வழக்குகள் இனி சிபிஐ-க்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பல மாதங்களாக, மராட்டிய அரசும், முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங்கும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.