கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று டெல்லி பயணம்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று டெல்லி செல்கிறார்.

Update: 2022-03-23 22:21 GMT
திருவனந்தபுரம்,

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று (வியாழக்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். அதி வேக கே-ரெயில் திட்டத்தை செயல்படுத்துவது, திருவனந்தபுரத்தில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 

இந்த நிலையில், இன்று முதல்-மந்திரி பினராயி விஜயன் மீண்டும் டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அதிவேக கே-ரெயில் திட்டத்திற்கு அடையாள கல் நடுவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில் இந்த சந்திப்பு முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் அதிவேக கே-ரெயில் திட்ட பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்