ரெயில்வேயில் 1.49 லட்சம் காலி பணியிடங்கள் - மத்திய மந்திரி தகவல்..!
ரெயில்வேயில் 1.49 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக மத்திய ரெயில்வே துறை மந்திரி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
இந்திய ரெயில்வேயில் 1.49 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார். அனைத்து மண்டலங்களிலும் காலி பணியிடங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதிகபட்சமாக வடக்கு ரெயில்வேயில் 19 ஆயிரத்து 183 காலியிடங்களும் அதைத் தொடர்ந்து தெற்கு ரெயில்வேயில் 17 ஆயிரத்து 22 காலியிடங்களும் இருப்பதாக மக்களவையில் அவர் தெரிவித்துள்ளார்.