கர்நாடகாவில் கொரோனா 4-வது அலை வந்தால் எதிர்கொள்ள தயார் - மந்திரி சுதாகர்

கொரோனா 4-வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள கர்நாடக அரசு தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.;

Update: 2022-03-22 21:19 GMT
பெங்களூரு,

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இந்தியாவில் ஐ.ஐ.டி. கான்பூர், கொரோனா 4-வது அலை வருகிற ஆகஸ்டு மாதம் தொடங்கும் என்று கூறியுள்ளது. 3-வது அலை குறித்த எச்சரிக்கையும் அந்த நிறுவனம் தான் வழங்கியது. அதை எதிர்கொள்ள கர்நாடக அரசு தயாராக உள்ளது. 

கடந்த சில வாரங்களாக நாங்கள் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

கொரோனா முழுமையாக செல்லும் வரை அனைவரும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்