சென்னைக்கு குடிநீர் கிடைக்கிறது என்றால் அதில் கர்நாடகத்தின் பங்கும் உள்ளது-கர்நாடக முதல் மந்திரி
சென்னைக்கு தற்போது குடிநீர் கிடைக்கிறது என்றால் அதில் கர்நாடகத்தின் பங்கும் உள்ளது என்பதை அவர்கள் மறக்கக்கூடாது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களுரு
கர்நாடக சட்டசபையின் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது;-
சென்னை நகருக்கு குடிநீரே இல்லை. முன்பு ரெயில்களில் குடிநீர் கொண்டு செல்வார்கள். அந்த நகரின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் 15 டி.எம்.சி. ஒதுக்கப்பட்டது. இதற்கு கர்நாடகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்கள் ஒப்புக்கொண்டன.
கிருஷ்ணா ஆற்று படுகையில் தமிழகம் இல்லாதபோதும், மனிதாபிமான அடிப்படையில் குடிநீர் வழங்க ஒப்புக்கொண்டோம். சென்னைக்கு தற்போது குடிநீர் கிடைக்கிறது என்றால் அதில் கர்நாடகத்தின் பங்கும் உள்ளது என்பதை அவர்கள் மறக்கக்கூடாது. ஆனால் அந்த நன்றி உணர்வு கூட தமிழகத்திற்கு இல்லை" என்றார்.