பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - குற்றவாளியின் வீட்டை இடித்து தள்ளிய அதிகாரிகள்
சுற்றுலா செல்வதாக அழைத்து சென்று பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் ஹவ்ஷங்காபாத் மாவட்டம் சொஹக்பூரை சேர்ந்த 28 வயது நிரம்பிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், அந்த பெண்ணுடன் பழகி வந்த அப்துல் உஸ்மானி என்ற நபருக்கும் அந்த பெண்ணை கடந்த சனிக்கிழமை சுற்றுலா செல்லலாம் என்று கூறி காரில் அழைத்துசென்றுள்ளார். அந்த காரில் அப்துலின் கூட்டாளிகளான ராஜேஷ் சிங் மற்றும் விவேக் ஜஹா ஆகியோரும் பயணித்துள்ளனர்.
ஷிஹிர்சாகர் என்ற பகுதிக்கு அழைத்து சென்று அந்த பெண்ணை அப்துல் மற்றும் அவரது கூட்டாளிகளான ராஜேஷ் சிங் மற்றும் விவேக் ஜஹா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அந்த பெண்ணுக்கு விஷம் கொடுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் அப்துல் வீட்டை அதிகாரிகள் இன்று இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக வீடு கட்டியுள்ளார். ஆகையால், அந்த கட்டிடம் இன்று இடிக்கப்பட்டதாக மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.