அலுவலகத்திற்கு வரவேண்டுமா? 'ஒர்க் பிரம் ஹோம்' முறையில் இருக்கும் ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்ய தயார்?
ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் நிறுவனம் ஒரு முக்கியமான ஆய்வை ஊழியர்கள் மத்தியில் நடத்தியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்படத் துவங்கியது முதல் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்தது.
இதனால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்காமல் தொடர்ந்து பணியாற்றி வந்தனர்.
பின்னர் இந்த ஆண்டு தொடக்கம் முதல் நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கினர்.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் நிறுவனம் ஒரு முக்கியமான ஆய்வை ஊழியர்கள் மத்தியில் நடத்தியுள்ளது.
இந்த ஆய்வில் 10 ஊழியர்களில் குறைந்தது 6 பேராவது அலுவலகத்திற்குச் சென்று பணியாற்றுவதற்குப் பதிலாக வேலையை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகப் பதிலளித்துள்ளனர்.
அதேபோல் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக அதிகச் சம்பளம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளையும் மறுக்கத் தயாராக உள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.