குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து

குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-03-22 00:23 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் குருவாயூர் தேவஸ்தானத்தில் புதிய தலைவராக வி. கெ.விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து நேற்று புதிய நிர்வாக குழு கூட்டம் தலைவர் வி.கெ.விஜயன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து தேவஸ்தான தலைவர் வி.கே.விஜயன் கூறுகையில், 

கொரோனா காரணமாக குருவாயூர் கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் குருவாயூர் கோவில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய தேவையில்லை. முன்பதிவு செய்யாமலே தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்