மராட்டியத்தில் மெர்சிடஸ் பென்ஸ் கார் ஆலைக்குள் புகுந்த சிறுத்தை புலியால் பரபரப்பு

புனேயில் மெர்சிடஸ் பென்ஸ் கார் ஆலைக்குள் புகுந்த சிறுத்தை புலியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-21 15:26 GMT
புனே,

புனே மாவட்டம் சாகான் எம்.ஐ.டி.சி. பகுதியில் குருலி கிராமம் அருகில் பிரபல கார் நிறுவனமான மெர்சிடஸ் பென்சின் உற்பத்தி ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில் அதிகாலை 5 மணியளவில் சிறுத்தை புலி ஒன்று சுற்றித்திரிவதை காவலாளிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் ஆலை ஊழியர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். மேலும் அங்கு பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் வனத்துறையினர், மீட்பு குழுவினரும் கார் ஆலைக்கு வந்தனர். அவர்கள் சிறுத்தை புலியை பிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இதில் சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காலை 11.30 மணியளவில் வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி 3 வயது ஆண் சிறுத்தை புலியை பிடித்தனர். பிடிப்பட்ட சிறுத்தை புலி மருத்துவ சோதனைக்கு பிறகு வனப்பகுதியில் விடப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார். 

மேலும் செய்திகள்