உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரியாக புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு
உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று ஆட்சியைத்தக்க வைத்தது.
டேராடூன்,
நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று ஆட்சியைத்தக்க வைத்தது. மொத்தம் உள்ள 70 இடங்களில் அந்தக் கட்சி 47 இடங்களை பிடித்தது. ஆனாலும் அந்த மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி (வயது 46) காதிமா தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இதனால் புதிய முதல்-மந்திரி பதவி யாருக்கு என்ற கேள்வி கடந்த சில நாட்களாக எழுந்தது இந்த நிலையில் டேராடூனில் இன்று (திங்கட்கிழமை)பா.ஜ.க. புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முதல் மந்திரியாக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.