சத்தீஷ்காரில் பா.ஜ.க. எம்.பி. வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளை

சத்தீஷ்காரில் பா.ஜ.க. எம்.பி. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.1 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Update: 2022-03-21 01:40 GMT


சுர்குஜா,


சத்தீஷ்காரில் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக இருப்பவர் ராம்விசார் நேதம்.  இவரது வீடு சுர்குஜா மாவட்டத்தில் அம்பிகாபூர் நகரில் உள்ளது.  சம்பவத்தன்று பாதுகாவலர்கள் வீட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

எனினும், மர்ம நபர்கள் சிலர் மெல்ல உள்ளே சென்று, வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.  இதன்பின்பு, வீட்டில் இருந்த 1 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு தப்பியோடி உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அம்பிகாபூர் நகர போலீசார் அகிலேஷ் கவுசிக் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வீட்டின் பாதுகாவலர்களிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது என அகிலேஷ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்