கொரோனா காலத்தில் 877 பச்சிளம் குழந்தைகள் பலி - மேகாலயா அரசு தகவல்

பிரசவத்துக்கு ஆஸ்பத்திரிகளில் சேராததால் கொரோனா காலத்தில் 877 பச்சிளம் குழந்தைகள் பலியானதாக மேகாலயா அரசு தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2022-03-20 23:27 GMT
சில்லாங்,

மேகாலயா மாநிலத்தில் கொரோனா தொற்று நோயின்போது புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகள், குழந்தை பெற்றெடுத்த பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தது தொடர்பாக அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக மேகாலயா அரசு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் சமீபத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதவாது:-

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்புக்கான காரணங்கள் ஆராயப்பட்டன. இதில் முறையான மருத்துவ கண்காணிப்பு இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. ஏனெனில் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு பயந்து பிரசவத்துக்கு ஆஸ்பத்திரிகளில் சேர மறுத்துவிட்டனர். 

பெரும்பாலான கர்ப்பிணிகள் வீட்டிலேயே பிரசவத்துக்கு ஏற்பாடுகளை செய்து கொண்டனர். எனவே பிரசவத்துக்கு பின்னர் தாயும், சேயும் முறையாக கண்காணிக்கப்படவில்லை. இதனாலேயே கொரோனா காலத்தில் 877 பச்சிளம் குழந்தைகளும், 61 தாய்களும் உயிரிழக்க நேர்ந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்