மலம்புழா அருகே அட்டகாசம் செய்த சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது

பிடிக்கப்பட்ட சிறுத்தைப்புலி வனப்பகுதியில் விடப்பட்டது.;

Update: 2022-03-20 00:51 GMT
கோப்புப்படம்
பாலக்காடு,

பாலக்காடு மாவட்டம் மலம்புழா அருகே கோனி என்ற இடத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இந்த பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்தது. அதை பிடிக்க நேற்று முன்தினம் கூண்டு வைக்கப்பட்டது. அந்த கூண்டில் நள்ளிரவு 2 மணியளவில் சிறுத்தைப்புலி சிக்கியது. இதுகுறித்து வனத்துறைக்கு, பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர், கூண்டோடு சிறுத்தைப்புலியை வாகனத்தில் ஏற்றி பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுத்தைப்புலி விடுவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்