பஞ்சாப்: கபடி வீரர் சந்தீப் சிங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் கைது
மேலும், கொலையில் தொடர்புடைய மூன்று வெளிநாட்டவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;
அமிர்தசரஸ்,
பஞ்சாபை சேர்ந்த சர்வதேச கபடி வீரரான சந்தீப் சிங், கடந்த மார் 14 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கபடி வீரர் கொலையில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக விளங்கும் 3 வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.