ஐபிஎஸ் அதிகாரியின் பையை சோதனை செய்த விமான நிலைய ஊழியர்களுக்கு காத்து இருந்த அதிர்ச்சி ..!
ஐபிஎஸ் அதிகாரியின் பையை சோதனை செய்த விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா. இவர் அந்த மாநிலத்தின் போக்குவரத்துதுறை கமிஷனராக உள்ளார். இவர் சமீபத்தில் ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த விமான நிலைய கண்காணிப்பு ஊழியர்கள் இவரை சோதனை செய்துள்ளனர்.
அப்போது அருண் போத்ரா கொண்டுவந்த கைப்பையை அவர்கள் சோதனை செய்தபோது அதில் கிலோ கணக்கில் பச்சை பட்டாணி இருந்துள்ளது. சோதனை முடிந்த பிறகு அவர் அங்கு இருந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Security staff at Jaipur airport asked to open my handbag 😐 pic.twitter.com/kxJUB5S3HZ
— Arun Bothra 🇮🇳 (@arunbothra) March 16, 2022
அவர் பச்சை பட்டாணி வைத்து இருந்த கைப்பையின் புகைப்படத்தை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எனது கைப்பையைத் திறக்கச் சொன்னார்கள்" என தெரிவித்துள்ளார்.
இந்த பச்சை பட்டாணிகளை தான் கிலோ ஒன்றுக்கு ரூ.40 கொடுத்து வாங்கியதாக அவர் தெரிவித்தார்.
அவரின் இந்த பதிவுக்கு 65,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.