தீமையை வெல்லும் ஹோலிகா தகன நிகழ்ச்சி; டெல்லி, அமிர்தசரசில் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட இடங்களில் இன்று ஹோலிகா தகன நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-03-17 17:09 GMT


அமிர்தசரஸ்,



நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நாளை உற்சாகமுடன் கொண்டாடப்பட உள்ளது.  இதனை முன்னிட்டு வண்ண பொடிகளின் விற்பனை சூடு பிடித்து உள்ளது.  வண்ணங்களின் திருவிழா, மகிழ்ச்சி மற்றும் தீமையை, நன்மை வெற்றி கொண்டதற்கான அடையாளம் ஆக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவியும், பூசியும் ஹோலி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.  இந்த பண்டிகைக்கு முந்தின நாளான இன்று ஹோலி தகனம் என்ற நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.  இதனை பஞ்சாப்பின் அமிர்தசரஸ், டெல்லியின் கோல் மார்க்கெட் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் மக்கள் கொண்டாடினர்.

உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் முதல்-மந்திரி (பொறுப்பு) யோகி ஆதித்யநாத், இன்று நடந்த ஹோலிகா தகன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.  இதில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் சாக்லெட்டுகளை அவர் வழங்கினார்.

மேலும் செய்திகள்