மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த கோரிக்கை - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2022-03-17 04:57 GMT
புதுடெல்லி,

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மத்திய மந்திரி நிதின் கட்கரியை டெல்லியில் நேற்று இரவு சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து 10 திட்டங்கள் குறித்து வலியுறுத்தியுள்ளோம். தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்.

திருச்சியில் இருந்து துவாக்குடி இடையே உயர்மட்ட சாலை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பல நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்