சீன வெளியுறவு மந்திரி இம்மாதம் இந்தியா வருகை?

சீன வெளியுறவு மந்திரி இம்மாதம் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-03-17 00:55 GMT
Image Courtesy: AFP
புதுடெல்லி, 

சீன வெளியுறவு மந்திரி வாங் யி இம்மாதம் இந்தியா வரலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், அவரது வருகையை மத்திய வெளியுறவு அமைச்சகமோ, சீன அரசோ இதுவரை அறிவிக்கவில்லை. தங்கள் நாட்டு வெளியுறவு மந்திரியின் வருகைக்கான முன்மொழிவை சீனாதான் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாங் யி இந்தியா வந்தால், அது இரு நாடுகளுக்கு இடையிலான கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் மோதலுக்குப் பிந்தைய முதல் மூத்த சீன தலைவரின் வருகையாக இருக்கும்.

இந்தியாவுடன், நேபாளம், பூடான், வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கும் சீன வெளியுறவு மந்திரி செல்லத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் நேபாளம் சென்றபிறகு இந்தியா வருவாரா, இந்தியா வந்தபிறகு நேபாளம் செல்வாரா என்று தெரியவில்லை.

கிழக்கு லடாக் பகுதியில் பதற்றத்தை தணிப்பதற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும், சீன வெளியுறவு மந்திரி வாங் யியும் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷிய தலைநகர் மாஸ்கோவிலும், தஜிக்கிஸ்தான் தலைநகர் துஷான்பேயிலும் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

வாங் யியின் இந்திய வருகை நடைபெற்றால், உக்ரைன் போர் குறித்து இரு தரப்பும் விவாதிக்க அது வாய்ப்பு வழங்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்