ரெயிலில் ஓசி பயணம் செய்தவர்களிடம் ரூ.1.70 கோடி அபராதம் வசூலித்து டிக்கெட் பரிசோதகர் சாதனை

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரை தலைமையிடமாகக் கொண்டு மேற்கு மத்திய ரெயில்வே இயங்கி வருகிறது.

Update: 2022-03-14 21:41 GMT
ஜபல்பூர், 

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரை தலைமையிடமாகக் கொண்டு மேற்கு மத்திய ரெயில்வே இயங்கி வருகிறது.

இதன் ஜபல்பூர் கோட்டத்தில் தலைமை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருபவர் ஆஷீஷ் யாதவ். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் இம்மாதம் 9-ந்தேதி வரை ரெயிலில் டிக்கெட் இன்றி பயணித்த 20 ஆயிரத்து 600 பயணிகளிடம் இருந்து மொத்தம் ரூ.1.70 கோடி அபராதம் வசூலித்துள்ளார். தனிநபராக ஒரு டிக்கெட் பரிசோதகரின் அதிகபட்ச அபராத வசூலாக இது இருக்கலாம் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டில், ஆஷீஷ் யாதவ் உள்ளிட்டோர் இடம்பெற்ற பறக்கும்படை, ரெயில்களில் ஓசி பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.71 கோடி அபராதம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்