மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் - அதிமுக எம்.பி. தம்பிதுரை

மேகதாதுவில் அணை கட்டுவது தமிழக விவசாயிகளை பாதிக்கும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேசினார்.;

Update: 2022-03-14 07:02 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. கொரோனா பரவல் குறைந்துவிட்ட நிலையில், இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 8ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 

மாநிலங்களையில் இன்று   மேகதாது அணை விவகாரத்தை எழுப்பிய  அதிமுக எம்.பி தம்பிதுரை கூறியதாவது: மேகதாதுவில் அணை கட்டுவது தமிழக விவசாயிகளை பாதிக்கும். அண்டை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணை கட்ட எப்படி நிதி ஒதுக்க முடியும்? மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்” என்றார். 

மேலும் செய்திகள்