ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட் - நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்குகிறது.

Update: 2022-03-14 03:26 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந் தேதி தொடங்கியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ந் தேதி,  மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

பின்னர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதையடுத்து, பிப்ரவரி 11-ந் தேதியுடன் முதல் அமர்வு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில்,  பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்குகிறது. கொரோனா பரவல் குறைந்துவிட்ட நிலையில், இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்குகின்றன. 

இதில், உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். 

மேலும் செய்திகள்