காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்காத மன்மோகன் சிங்..!

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட முக்கிய தலைவர்கள் 5 பேர் பங்கேற்கவில்லை

Update: 2022-03-13 14:15 GMT
Photo Credit: ANI
புதுடெல்லி,

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு டெல்லியில் முதல்முறையாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.  காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.  

இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து  விரிவான ஆலோசனை நடைபெற்று இருக்கலாம் என்று தெரிகிறது.   

இதனிடையே, இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட முக்கிய தலைவர்கள் 5 பேர் பங்கேற்கவில்லை.  மன்மோகன் சிங் தவிர, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஏகே அந்தோனி, எம்.பி செல்ல குமார், மணிப்பூர் முன்னாள் துணை முதல் மந்திரி கெய்கங்கம், தரிக் ஹமீத் க்ர்ரா, சஞ்சீவ ரெட்டி ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

ஏகே அந்தோணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவரது மகன் தெரிவித்தார். பிற தலைவர்கள் ஏன் பங்கேற்கவில்லை என்ற விவரம் தற்போது வரை வெளியாகவில்லை. 

மேலும் செய்திகள்