இமயமலையில் கொட்டும் பனியில் கபடி விளையாடும் ராணுவ வீரர்கள்! வைரல் வீடியோ!!

ராணுவ வீரர்கள், ஓய்வு நேரத்தில் கபடி விளையாடிய வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.;

Update: 2022-03-13 03:02 GMT
புதுடெல்லி,

இமாசலபிரதேசத்தில் இமயமலை எல்லையில் இந்தோ திபெத்திய எல்லை காவல்படையினர்,  பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கடும் பனியில் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருக்கும் ஹிம்வீர்ஸ் என்றழைக்கப்படும் இமயமலை வீரர்கள், ஓய்வு நேரத்தில்  கபடி விளையாடிய வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர்கள் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் இமயமலையில் கம்பளி ஆடைகளை அணிந்துகொண்டு கபடி விளையாடும் வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் செய்திகள்