மது போதையில் மாணவர்களை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்

மதுபோதையில் பள்ளிக்கூடத்திற்கு வந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2022-03-12 18:22 GMT
ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் தினேஷ் குமார் லெட்சுமி. அவர் கடந்த 10-ம் தேதி மது போதையில் பள்ளிக்கூடத்திற்கு வந்துள்ளார்.

மேலும், மது போதையில் இருந்த தினேஷ் பள்ளிக்கூடத்தில் உள்ள மாணவர்களை கிரிக்கெட் பேட்டால் தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து போதை தலைக்கெறிய தினேஷ் பள்ளிக்கூட அலுவலக அறையிலேயே படுத்து உறங்கியுள்ளார்.

மது போதையில் ஆசிரியர் தினேஷ் அலுவலக அறையில் படுத்து கிடந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து, ஆசிரியர் தினேஷை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்