ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளால் பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை

தெற்கு காஷ்மீரின் குல்காமில் பஞ்சாயத்து தலைவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

Update: 2022-03-11 16:38 GMT
கோப்புப்படம்
ஜம்மு கஷ்மீர்,

தெற்கு காஷ்மீரின் குல்காமில் உள்ள அடூரா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பஞ்சாயத்து தலைவர் படுகாயமடைந்தார்.

அடி வயிற்றில் புல்லட் காயங்களுடன் அவர் குல்காமில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அப்பகுதியில் கடந்த இரு தினங்களில் இரண்டு பஞ்சாயத்து தலைவர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் தேதி ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் உள்ள கோன்மோஹ் பகுதியில் பஞ்சாயத்து தலைவரரான சமீர் அகமது பட் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த பயங்கரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றனர். 

மேலும் செய்திகள்