‘‘நொய்டாவுக்கு சென்றால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது’’ - தவறான எண்ணத்தை உடைத்த யோகி..!

நொய்டாவுக்கு சென்றால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற தவறான எண்ணத்தை யோகி ஆதித்யநாத் உடைத்துள்ளார்.

Update: 2022-03-10 23:58 GMT
கோப்புப்படம்
லக்னோ, 

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.

டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவுக்கு செல்லும் முதல்-மந்திரி, மீண்டும் அப்பதவிக்கு வர முடியாது என்ற ஒரு எண்ணம் உலவுகிறது. ஆனால், யோகி ஆதித்யநாத் தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் நொய்டாவுக்கு 10 தடவை சென்றுள்ளார்.

இருப்பினும், தொடர்ந்து 2-வது தடவையாக அவர் ஆட்சியை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம், நொய்டா பற்றிய தவறான எண்ணத்தை உடைத்துள்ளார்.

பா.ஜனதா சார்பில் கல்யாண்சிங், ராஜ்நாத்சிங் ஆகியோர் இதற்கு முன்பு முதல்-மந்திரியாக இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து 2-வது தடவையாக முதல்-மந்திரியாக இருந்தது இல்லை.

ஆனால், இதிலும் யோகி ஆதித்யநாத் மாறுபடுகிறார். 2-வது தடவையாக பதவிக்கு வரும் ஒரே பா.ஜனதா முதல்-மந்திரி ஆகிறார். தனி பெரும்பான்மையுடன் வென்ற பா.ஜனதா முதல்-மந்திரியும் அவரே ஆவார்.

மேலும் செய்திகள்