5 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் - மராட்டிய மந்திரி ஆதித்யா தாக்கரே

5 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மராட்டிய மந்திரி ஆதித்யா தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2022-03-10 16:35 GMT
மும்பை,

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை  வெளியாகின. இவற்றில் பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக முன்னணியில் உள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மராட்டிய மாநில சுற்றுச்சூழல் மந்திரி ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-

5 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நாங்கள் முடிவுகளை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறோம். உ.பி.யில் எங்கள் கட்சி அடித்தளத்தை விரிவுபடுத்துவோம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல பலன்களைக் காண்போம். மகாவிகாஸ் அகாடியில் முடிவுகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்