மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்: ராகுல் காந்தி

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்று காங். எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-10 10:57 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. 

இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதேநிலை தொடரும் பட்சத்தில் இந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றும். 

அதேபோல், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பஞ்சாப்பில் ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். இந்த தேர்தலில் காங்கிரசுக்காக கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தொண்டர்களுக்கு எனது நன்றி. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.  

மேலும் செய்திகள்