காங்கிரஸ் சந்தித்த மோசமான தோல்வி இது - சிவசேனா தலைவர் சஞ்ஜய் ராவத்

பாஜகவின் வெற்றி அவர்களுடைய சிறப்பான தேர்தல் மேலாண்மைக்கு கிடைத்த வெற்றியாகும் என்று தெரிவித்தார்.;

Update: 2022-03-10 10:07 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜகவின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இப்போதைய நிலவரம், பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் என்பதை காட்டுகிறது.

இந்நிலையில், சிவசேனா தலைவர் சஞ்ஜய் ராவத் பாஜகவின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “இந்த தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை.

பஞ்சாபில் மக்கள் இன்னொரு தேர்வாக ஆம் ஆத்மியை தேர்ந்தெடுத்துள்ளனர். பாஜகவின் வெற்றி அவர்களுடைய சிறப்பான தேர்தல் மேலாண்மைக்கு கிடைத்த வெற்றியாகும்” என்று தெரிவித்தார்.     

மேலும் செய்திகள்