பஞ்சாப் முதல்- மந்திரி போட்டியிட்ட இரு இடங்களிலும் தோல்வி..!

பஞ்சாப் முதல்- மந்திரி சரண்ஜித்சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.

Update: 2022-03-10 09:41 GMT
கோப்புப்படம்
சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. 

பஞ்சாபில் தற்போதைய நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் முன்னிலையுடன் இரண்டாவது இடத்திலும், ஆம் ஆத்மி 91 தொகுதிகளில் முன்னிலையுடன் முதல் இடத்திலும் உள்ளன. 

இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதல்- மந்திரியான சரண்ஜித்சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். காங்கிரசை சேர்ந்த அவர், தான் போட்டியிட்ட சப்காப் சாஹிப் மற்றும் பதார் ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும், தோல்வியை தழுவி பெரும் ஏமாற்றமடைந்தார். ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி பஞ்சாபை கோட்டைவிட்டது. 

மேலும் செய்திகள்