வழக்கமான போர் நடக்கலாம் என்பதையே உக்ரைன் - ரஷியா மோதல் காட்டுகிறது: ராணுவ தளபதி
உக்ரைன் மீது ரஷியா கடந்த 24 ஆம் தேதி ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.;
புதுடெல்லி,
ரஷியா- உக்ரைன் இடையே தற்போது நீடிக்கும் மோதல் வழக்கமான போர் நடைபெறும் என்பதையே காட்டுகிறது என்று இந்திய ராணுவத்தளபதி எம்.எம் நரவனே தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எம்.எம் நரவனே கூறியதாவது; -
உக்ரைன் - ரஷியா இடையே நடைபெறும் போரானது சைபர் தாக்குதலாகவோ அல்லது ஏசி அறையில் இருந்தபடியோ நடக்கவில்லை. தற்போது நடைபெறும் இந்த போரானது வழக்கமான போர் நடைபெறும் என்பதையே காட்டுகிறது. தற்போது நடைபெறும் சண்டை நேரடியாகவே படைகளின் மோதலாகவே நடைபெறுகிறது. எனவே, வழக்கமான போர் நடக்கலாம். எனவே, அதற்கும் தயாராகவே இருக்க வேண்டும்” என்றார்.