“காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக நாங்கள் தான்” உற்சாகமாக கூறி வரும் ஆம் ஆத்மி தலைவர்கள்...!

'தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று நாங்கள்தான்' என்று ஆம் ஆத்மி தலைவர்கள் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.

Update: 2022-03-08 09:54 GMT
புதுடெல்லி,

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பஞ்சாபில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி  கட்சி  70 இடங்கள் வரை பெற்று பெரும்பான்மையாக வெற்றிப்பெற்று ஆட்சி அமைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், அக்கட்சி உற்சாகமடைந்துள்ளது.  இதனால் ஆம் ஆத்மி தலைவர்கள், தேசிய அளவில் இனி காங்கிரஸ் கட்சிக்கும் மாற்று தாங்கள் தான் என்று கூறி வருகின்றனர்.

இதுதொடர்பாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகவ் சாதா கூறியதாவது: 

பஞ்சாப் மக்கள் மாற்றத்திற்காக அதிகளவில் வாக்களித்துள்ளனர். மக்கள் பாரம்பரிய அரசியல் கட்சிகளை நிராகரித்துள்ளனர் என்பதை கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. தேசிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக் கட்சியாக ஆம் ஆத்மி மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்