‘விவிபேட்’ ஒப்புகை சீட்டுகள் சரிபார்த்தல் தொடர்பான வழக்கு - நாளை விசாரிக்கை சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாகவே ‘விவிபேட்’ ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-03-08 08:40 GMT
டெல்லி,

இந்தியாவில் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குப்பதிவு செய்வதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், இதே முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று, நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு ‘விவிபேட்’ எனப்படும் கருவியில் பதிவாகி உள்ள ஒப்புகை சீட்டுகள் சரிபார்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாகவே ‘விவிபேட்’ ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த ‘ரிட்’ மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி முறையிடப்பட்டது. அப்போது நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தற்போது முறையிடுவது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த ரிட் மனு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியதோடு, நாளை மனு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்