மகளிர் தினம்: சமூகத்தை மாற்றும் திறன் கொண்டவர்கள் - ராகுல் காந்தி வாழ்த்து
“பெண்கள் தங்கள் ஞானம், அர்ப்பணிப்பு மற்றும் வலிமையால் ஒரு சமூகத்தை மாற்றும் திறன் கொண்டவர்கள் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உட்ளிட்ட அனைவரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில்,
பெண்கள் தங்கள் ஞானம், அர்ப்பணிப்பு மற்றும் வலிமையால் ஒரு சமூகத்தை மாற்றும் திறன் கொண்டவர்கள். அவர்களுக்கு வெகு நாட்களாக கொடுக்கப்படாத அனைத்தும் கிடைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.