இன்று சர்வதேச மகளிர் தினம்: 29 பெண்களுக்கு ஜனாதிபதி விருதுகள்..!
இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, 29 பெண்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்குகிறார்.
புதுடெல்லி,
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 2020, 2021-ம் ஆண்டுகளுக்கான பெண் சக்தி விருதுகளை (நாரி சக்தி புரஸ்கார்) 29 பெண்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார். இந்த விருது பெறும் பெண்களுடன் பிரதமர் நரேந்திர மோடியும் உரையாடுவார்.
தொழில்துறை, விவசாயம், கண்டுபிடிப்பு, சமூகப்பணி, கல்வி, கலை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் அசாதாரண பங்களிப்பை அளித்த பெண்களையும், நிறுவனங்களையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
சமூக தொழில்முனைவாளர் அனிதா குப்தா, பழங்குடியின செயல்பாட்டாளர் உஷாபென் தினேஷ்பாய் வாசவா, கண்டுபிடிப்பாளர் நசிரா அக்தர், இன்டெல்-இந்தியா நிறுவன தலைமை நிர்வாகி நிவ்ருதி ராய் உள்ளிட்டோர் பெண் சக்தி விருது பெறுகிறார்கள்.