இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை! - காங்கிரஸ் அறிக்கை

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.;

Update: 2022-03-07 07:59 GMT
புதுடெல்லி,

ரஷிய தாக்குதலால் உருக்குலைந்து போயிருக்கும் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியா கடந்த காலங்களில் வளைகுடா போர், லெபனான், லிபியா மற்றும் ஈராக் ஆகியவற்றின் போது, இந்தியர்களை வெளியேற்றுவதற்காக தனது விமானப்படை மற்றும் கடற்படை மூலம் பெரிய அளவிலான நடவடிக்கைகளை பாகுபாடான பிரச்சாரத்தில் ஈடுபடாமல் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

போர் நடக்கும் பகுதிகளில் உள்ள இந்திய மக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.

உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் மற்றும் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்டு வர புவியியல் ரீதியாக மனிதாபிமான நடைபாதைகள் அமைத்திட வேண்டும் என்பதை காங்கிரஸ் வேண்டுகோள் வலியுறுத்துகிறது.

அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு காணவும், அமைதியை நிலைநாட்டவும் ரஷியா, உக்ரைன் மற்றும் நேட்டோ தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
நமது நாட்டின் குடிமக்களை அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியது இந்திய அரசின் கடமை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்