உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த 16 ஆயிரம் இந்தியர்கள் இதுவரை மீட்பு மத்திய அரசு தகவல்
ரஷிய தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் சிக்கி தவித்த 16 ஆயிரம் இந்தியர்கள் 76 விமானங்கள் மூலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
தனது அண்டை நாடான உக்ரைன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி கடந்த மாதம் 24-ந் தேதி போரை தொடங்கினார் ரஷிய அதிபர் புதின்.
மிகப்பெரும் சவால்
இது உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவுக்கு மற்றுமொரு அதிர்ச்சியையும் சேர்த்து கொண்டு வந்தது. அது, உக்ரைனில் சிக்கியிருக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மீட்பது என்ற பெரும் சவால் ஆகும்.
போர் தொடங்குவதற்கு முன்பே இந்திய மாணவர்களை வெளியேற அறிவுறுத்தி இருந்த மத்திய அரசு, அதற்கான மீட்பு பணிகளையும் தொடங்கியது. அதன்படி ராணுவ நடவடிக்கை தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, அதாவது 22-ந் தேதியே முதல் விமானத்தை உக்ரைனுக்கு அனுப்பி இந்தியர்களை மீட்கும் பணியை தொடங்கியது.
ஆனால் போர் தொடங்கியதும் இந்த பணிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால் இந்தியா மட்டுமின்றி எந்த நாட்டின் விமானங்களும் உக்ரைன் வான்பகுதிக்குள் நுழைய முடியவில்லை.
அண்டை நாடுகள் உதவி
இந்த சவாலான சூழலிலும் இந்தியர்களை மீட்க மாற்று வழிகளை மத்திய அரசு பரிசீலித்தது. குறிப்பாக உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை, அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி அங்கிருந்து விமானங்கள் மூலம் மீட்டு வருவது என முடிவானது.
அதன்படி போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாகியா உள்ளிட்ட உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மாணவர்களை வெளியேற்றி அங்கிருந்து தனியார் விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரும் பணிகள் தொடங்கின.
இதற்காக அந்தந்த நாடுகளின் அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு மேற்கெண்ட நடவடிக்கைகளால், இந்தியாவின் மீட்பு பணிகளுக்கு உதவ இந்த நாடுகளும் முன்வந்தன.
‘ஆபரேஷன் கங்கா’
இதைத்தொடர்ந்து ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிட்டு இந்த பணிகளை தொடங்கிய மத்திய அரசு ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர்ஏசியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் விமானங்களை அடுத்தடுத்து அந்த நாடுகளுக்கு அனுப்பி மாணவர்களை மீட்டு வருகிறது.
இந்த பணிகளை நிமிடத்துக்கு நிமிடம் கண்காணித்து வரும் பிரதமர் மோடி, மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறார்.
மந்திரிகள் அனுப்பி வைப்பு
இது ஒருபுறம் இருக்க, உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து இந்த பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 4 மத்திய மந்திரிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த வகையில் ஹர்தீப் சிங் புரி ஹங்கேரிக்கும், ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியாவுக்கும், கிரண் ரெஜிஜூ சுலோவாகியாவுக்கும், வி.கே.சிங் போலந்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
உக்ரைனில் இருந்து வெளியேறி இந்த நாடுகளுக்கு வரும் இந்திய மாணவர்களை அங்கு பத்திரமாக தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதுடன், பின்னர் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
விமானப்படையும் குதித்தது
இந்த மீட்பு பணிகளில் அடுத்தகட்ட முன்னேற்றமாக, விமானப்படையும் களத்தில் குதித்தது. இதற்காக சி.17 ரக போக்குவரத்து விமானங்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
அங்கிருந்து இந்திய மாணவர்களுடன் நாடு திரும்பி வரும் இந்த விமானங்கள், அந்த நாடுகளுக்கு நிவாரண உதவிகளையும் எடுத்து சென்று வருகிறது.
இவ்வாறு இடைவிடாமல் பறந்து வரும் தனியார் மற்றும் விமானப்படை விமானங்களின் சேவையால் இந்திய மாணவர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் நாடு திரும்பி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.
ஒரே நாளில் 2,135 பேர்
இந்த வரிசையில் நேற்றும் ஒரே நாளில் 11 விமானங்களில் 2,135 இந்தியர்கள் தாயகம் வந்து சேர்ந்தனர். இதில் 9 விமானங்கள் டெல்லியிலும், 2 விமானங்கள் மும்பையிலும் தரையிறங்கின.
இதில் 6 விமானங்கள் ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் இருந்தும், 2 விமானங்கள் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட், 2 விமானங்கள் போலந்தின் ரெஸ்ஸோவ், ஒரு விமானம் சுலோவாகியாவின் கோசிஸ் நகரில் இருந்தும் வந்தன.
உக்ரைன் இடரில் இருந்து மீண்டு நேற்று தாயகம் வந்து சேர்ந்த இந்த 2,135 பேருடன் சேர்த்து, கடந்த 22-ந் தேதி முதல் மொத்தம் 76 விமானங்களில் 15 ஆயிரத்து 900-க்கு மேற்பட்ட இந்தியர்கள் மீண்டு வந்து சேர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இதில் தனியாருக்கு சொந்தமான 66 பயணிகள் விமானங்கள் மூலம் 13,852 பேரும், விமானப்படைக்கு சொந்தமான 10 விமானங்கள் மூலம் 2,056 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு உக்ரைனில் இருந்து சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியிருந்தாலும், இன்னும் ஏராளமானவர்கள் உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளில் உள்ளனர். அவர்களையும் மீட்கும் பணிகள் விரைந்து நடந்து வருகிறது.
இன்று 8 விமானங்கள்
அந்த வகையில் மத்தியஅரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இன்று (திங்கட்கிழமை) மேலும் 8 விமானங்கள் மூலம் 1,500-க்கு மேற்பட்ட மாணவர்கள் இந்தியா வருகின்றனர். இதில் 5 விமானங்கள் புதாபெஸ்டில் இருந்தும், 2 விமானங்கள் ருமேனியாவின் சுசீவாவில் இருந்தும், ஒரு விமானம் புகாரெஸ்டில் இருந்தும் நாடு திரும்புகிறது.
இதற்கிடையே உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் ஜனவரியில் வெளியிட்ட எச்சரிக்கை அறிவுறுத்தலுக்கு பிறகு இதுவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி இருப்பதாகவும், அதில் 19,920 பேர் இந்தியா வந்து சேர்ந்திருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியா திரும்புவதற்காக ஹங்கேரியில் இருந்து விமானம் ஏறிய மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தில் ‘வந்தே மாதரம்’ என கோஷமிடும் வீடியோ பதிவு ஒன்றை அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்டு மீட்புக்குழுவினரின் பணிகளை பாராட்டி உள்ளது.
ருமேனிய எல்லையில் இந்திய மாணவர்கள்
இதற்கிடையே உக்ரைனின் பிசோச்சின் பகுதியில் இருந்து போலந்து எல்லையை நோக்கி சென்று கொண்டிருந்த 44 இந்திய மாணவர்களை மீட்டு உள்ளதாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
இதைப்போல வேறு சில பகுதிகளில் இருந்து ருமேனிய எல்லையை அடைந்த 150-க்கு மேற்பட்ட மாணவர்களும் மீட்கப்பட்டு இந்தியா அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளது.