பாலஸ்தீனத்தில் உள்ள இந்திய தூதரகம்:சடலமாக மீட்கப்பட்ட இந்திய தூதர்..!

பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய தூதர் சடலமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-03-06 22:18 GMT
கோப்புப்படம்
பாலஸ்தீனம்,

பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அமைந்துள்ள ரமல்லாவில் உள்ள அவரது பணியிடத்தில் இந்திய தூதர் முகுல் ஆர்யா உயிரிழந்ததாக பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை முடிக்க அவர்கள் வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய தூதர் முகுல் ஆர்யாவின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சி அளிப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், “ரமல்லாவில் உள்ள இந்தியப் பிரதிநிதி ஸ்ரீ முகுல் ஆர்யா காலமானதைப் பற்றி அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். அவர் ஒரு திறமையான அதிகாரியாக இருந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காக எனது இரங்கல்” என்று ஜெய்சங்கர் டுவீட் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்