புனேவில் புதிய மெட்ரோ திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

புனேவில் புதிய மெட்ரோ திட்டத்தை துவக்கி வைத்து பயணிகளுடன் பிரதமர் மோடி பயணம் செய்தார்.

Update: 2022-03-06 07:34 GMT
புனே,

மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி  புனே வந்தடைந்தார்.  காலை 11 மணியளவில் புனே மாநகராட்சி அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜி சிலையை திறந்து வைத்தார். 9.5 அடி நீளம் கொண்ட இந்த சிலை 1,850 கிலோ உலோகத்தால் செய்யப்பட்டது ஆகும்.

பின்னர் காலை 11.30 மணிக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். கர்வாரே மெட்ரோ ரெயில் நிலையத்தை திறந்து வைத்த அவர், அந்த ரெயில் நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்கு இருந்து ஆனந்த்நகர் வரை மெட்ரோ ரெயிலில் பயணிகளுடன் டிக்கெட் எடுத்து கொண்டு  பயணம் செய்தார். அப்போது பள்ளி மாணவிகளுடன் உரையாடினார். 

32 கி.மீ தூரமுள்ள புனே மெட்ரோ ரெயில் திட்டத்தின் 12 கி.மீ தூரமுள்ள புனே மெட்ரோ ரெயில் திட்டத்தின் 12 கி.மீ வழி தடத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். ரூ. 11.40 கோடி செலவில் 12 கி.மீ தொலைவுக்கான மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்