ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 2 பெண்கள் பலி, 9 பேர் காயம்
மேற்கு வங்காளத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 2 பெண்கள் பலியாகினர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 2 பெண்கள் பலியாகினர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் காந்தி பகுதியில் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோ ஒன்று, டிப்பர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து மரிஷ்டா காவல் நிலையம் அருகே ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த பகுதிக்கு அருகே போலீஸ் வாகனம் ரோந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தெரிந்து ஆத்திரமடைந்த ஒரு கும்பல் போலீஸ் வாகனத்தை தீ வைத்து எரித்தது. இதனால் 2 போலீசார் காயமடைந்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.