உக்ரைனில் தங்கி இருக்கும் இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை
உக்ரைனில் தங்கி இருக்கும் இடங்களில் இருந்து வெளியேற வேண்டாம் என இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.;
புதுடெல்லி
இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
உக்ரைனில் சுமியில் உள்ள இந்திய மாணவர்களைப் பற்றி நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். எங்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பானபாதையை உருவாக்க உடனடி போர்நிறுத்தத்திற்கு பல வழிகள் மூலம் ரஷிய மற்றும் உக்ரேனிய அரசாங்கங்களை கடுமையாக அழுத்தம் கொடுத்துள்ளோம்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தங்குமிடங்களுக்குள் இருக்கவும் மற்றும் தேவையற்ற அபாயங்களைத் தவிர்க்கவும் எங்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
வெளியுறவுத்துறை அமைச்சகமும் எங்கள் தூதரகங்களும் மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளன என கூறி உள்ளார்.
We are deeply concerned about Indian students in Sumy, Ukraine. Have strongly pressed Russian and Ukrainian governments through multiple channels for an immediate ceasefire to create a safe corridor for our students.
— Arindam Bagchi (@MEAIndia) March 5, 2022
Have advised our students to take safety precautions, stay inside shelters and avoid unnecessary risks.
— Arindam Bagchi (@MEAIndia) March 5, 2022
Ministry and our Embassies are in regular touch with the students.