டெல்லி: உடற்பயிற்சிக்கூடத்தில் அதிக சத்தத்துடன் பாட்டுகேட்ட நபர் குத்தி கொலை

இருதரப்பினர் இடையே உடற்பயிற்சிக்கூடத்தில் நடந்த மோதலில் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

Update: 2022-03-01 20:32 GMT
கோப்புப்படம்
டெல்லி,

மத்திய டெல்லியின் பஹங்கஞ்ச் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் மனோஜ் மஞ்சந்தா(45) என்பவர் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுள்ளார். இதனால், கடுப்பான அங்கிருந்த சிலர் மனோஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், மனோஜை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட மனோஜின் ஆதரவாளர்கள் அவர்களை தாக்கினர். இதனால் இரு குழுவினருக்கும் சண்டை முற்றியது. இந்த தாக்குதலில் ஒருவர் மனோஜை கத்தியால் குத்தினார். மேலும் பலருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மனோஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து மனோஜின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து  விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்