'ஓம் நமசிவாய; நாங்கள் அமைதிக்காக பிரார்த்திக்கிறோம்' - மணல் சிற்பம் அமைத்து ரஷியாவிற்கு வேண்டுகோள்..!
உக்ரைனில் அமைதி தேவை என்பதை குறிக்கும் வகையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் மணல் சிற்பம் ஒன்றை அமைத்துள்ளார்.;
புவனேஸ்வர்,
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் மீது 6-வது நாளாக போர் தாக்குதலை தொடுத்து வருகிறது.
உக்ரைனில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அங்கு அமைதி நிலவ வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் ஒடிசாவைச் சேர்ந்த இந்தியாவின் புகழ் பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் புரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுவதால் அதனை சிறப்பிக்கும் விதமாக மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். 23 ஆயிரம் ருத்ராட்சங்களை வைத்து சிற்பத்தை வைத்துள்ளார். அந்த சிற்பம் 9 அடி உயரத்தில் 8 அடி வீதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
#OmmNamahShivay….🙏
— Sudarsan Pattnaik (@sudarsansand) March 1, 2022
On the occasion of Maha #Shivaratri, For the first time I have used 23,436 Rudrakshya installed on My Sand art of Lord Shiva at Puri beach . pic.twitter.com/U8yuV2pL58
சிவபெருமானின் வடிவத்தை அமைத்து 'ஓம் நமசிவாய; நாங்கள் அமைதிக்காக பிரார்த்திக்கிறோம்' என்ற வாசகத்துடன் அந்த மணல் சிற்பத்தை சுதர்சன் அமைத்துள்ளார். தற்போது இந்த மணல் சிற்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.